திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது. இதே போல் நெல்லை மாநகரை சுற்றி இருக்கும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
Categories