கடல் நீரை மேகம் உறிஞ்சுவது போன்ற அதிசய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தூத்தூர் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
அப்போது கடல் நீரை மேகம் உறிஞ்சுவது போன்று தண்ணீர் மேல் நோக்கி எழுந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வு அரை நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த அதிசய நிகழ்வை அப்பகுதி மீனவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.