Categories
வானிலை

இடி, மின்னலுடன் கூடிய பலத்த கன மழை…. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதோடு, தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளையும் வெள்ளநீர் சூழ்வதால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, சேரப்பட்டு, மாவடிப்பட்டு, கொட்டப்புதூர், வெள்ளிமலை மற்றும் கரியாலூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து  ஓடுகிறது. அதன்பிறகு வெள்ளி மலை மற்றும் மணலாறு பகுதிகளில் உள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இந்நிலையில் பெரியார் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கச்சிராபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தாழ்வான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோட்ட மருதூர் கிராமத்தை சேர்ந்த  கொத்தனாரான பிரபு என்பவர் குளத்தங்கரை அருகே நின்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |