மின்னல் தாக்கியதால் 3 மாடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை, சித்தன்னவாசல், காலாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கரடிக்காடு பகுதியில் மரியகிறிஸ்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சினை மாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது. மேலும் சித்திக், பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகளும் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.