தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மேலும் கத்திரி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் கோவை, நீலகிரி, தேனி, டெல்டா மாவட்டங்கள் ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.