தமிழகத்தில் இன்று ( பிப்.13 ) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ( பிப்.13 ) தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :-
மன்னார் வளைகுடா மற்றும் குமரி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.