வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாக்குறிச்சி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து சுப்பிரமணி மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.