தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு மருந்து கடைகளில் இந்த எண்ணெய் கிடைக்கும்.
லேசாக இதனை சூடாக்கி வலி இருக்கும் இடத்தில் தடவி வர எலும்புகள் பலமடையும். இதோடு ஒரு கை அளவு வறுத்த கடலையும், 50 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும். இவற்றை சாப்பிட்டபிறகு ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலை அருந்துங்கள் முதுகு எலும்பிற்கு இது மேலும் பலம் சேர்க்கும். அதேபோல் சுக்கு டீ, கொள்ளு போன்றவையும் இடுப்பு வலியைப் போக்க சிறந்த மருந்து.