இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பது பாஜகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நடந்து முடிந்த 23 சட்டப்பேரவை மற்றும் மூன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பின் அடையாளமே ஆகும். வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Categories