ரோடு ரோலர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளமணக்கரை பகுதியில் உபதேசியார் தெருவில் டேனியல் வசித்து வருகிறார். இவரின் மகன் ஸ்டீபன் ஸ்டாலின் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்இந்நிலையில் ஸ்டீபன் ஸ்டாலின் புதுச்சாவடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சம் காரணமாக ரோட்டோரம் இருந்த ரோடு ரோலர் மீது ஸ்டாலின் மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்டாலினை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவரது நல்லடக்கம் சொந்த கிராமத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று அந்த சாலையில் சென்ற அரசு பேருந்தின் டிரைவர் ரோடுரோலர் மீது மோதி அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, ரோடு ரோலரை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்களை அங்கு பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.