இட்லி உப்புமா பற்றிய ரகசியத்தை நடிகை தேவயானி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக 90’s கிட் காலத்தில் வளம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் காதல் கோட்டை, சூரிய வம்சம், நீ வருவாய் என உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு மகள்கள் உள்ளன. இவர் தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்த வருகிறார்.
90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சூரிய வம்சம். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு காட்சியில் தனது தந்தைக்கு நடிகை தேவயானி இட்டி உப்புமா செய்து பரிமாறுவார் அந்த காட்சிகளை தற்போது அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த படத்திற்கு பின் இட்லி உப்புமா ஃபேமஸ் ஆனது. இது குறித்து தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இட்லி உப்புமா இயக்குனர் விக்ரமனோட எண்ணம் தான். அவரோட கான்செப்ட் தான். என்னுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் இது பிடிக்கும் .எனக்கே ரொம்ப ஃபேவரிட் டிஸ்தான் என்று கூறியுள்ளார்.