Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி துணியில் ஒட்டாமல் இருக்க என்ன செய்வது…? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!

இந்திய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான முக்கிய இடத்தைப் பிடிப்பது இட்லி. மல்லிப்பூ போல மெண்மையாக வருவதை அனைவரும் விரும்புவர். இட்லி தட்டில் போடுவதற்கு அனைவரும் காட்டன் துணியை பயன்படுத்தினார்கள். சிலர் காட்டன் துணிக்கு பதிலாக ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் வேஷ்டியை பயன்படுத்தி இட்லி அவிப்பார்கள். பியூர் காட்டன் துணியை பயன்படுத்தினால் இட்லி ஒட்டாமல் சாப்டாக வரும். இட்லி அவிக்க பயன்படுத்தி துணியை அலசி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி செய்யும்போது இட்லி துணியில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். இட்லி அவிக்கும் போது ஒரு முறை துணியை சூடான நீரில் நினைத்து அதன்பிறகு ஊற்றவேண்டும் இட்லிக்கு ஊற்றும் மாவில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கி கொண்டு பின்னர் இட்லி  ஊற்றினாலும் இட்லி ஒட்டாமல் வரும். இட்லி பஞ்சு போல வருவதற்கு இட்லி மாவு அரைக்கும் போது ஒரு  ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும்.

அப்படி செய்தால் இட்லி பஞ்சு போல் மிருதுவாக கையில் ஒட்டாமல் இருக்கும். இட்லி வெந்த பிறகு தட்டிலிருந்து இட்லி எடுப்பதற்கு முன்னர் சிறிதளவு சுத்தமான நீரை இட்லி மேல் தெளித்து விட்டால் இட்லி ஒட்டாமல் வரும். இல்லையெனில் குழாய் தண்ணீரை திறந்துவிட்டு இட்லி தட்டை பின்புறமாக காட்ட வேண்டும். அதன் பிறகு இட்லி எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் இட்லி வரும்.

Categories

Tech |