Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி மாவு, கேரட் இருக்கா? அப்போ புதுவிதமான ரெசிபி செய்யலாமே…!!

மசாலா இட்லி கேரட் செய்ய தேவையான பொருட்கள்:

வெங்காயம்                         – அரை கப் நறுக்கியது
கொத்தமல்லி இலை       – சிறிதளவு
கேரட் துருவியது               – 1/2 கப் அரைக்க
மிளகாய்த்தூள்                   – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்           – அரை டீஸ்பூன்
துருவிய சீஸ்                         – கால் கப்
கடுகு, உளுந்தம்பருப்பு  – தாளிக்க
உப்பு                                         – தேவையான அளவு
எண்ணெய்                            – 2 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு                             – தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப், அரைத்த கேரட் துருவல் 1/2 கப் சேர்த்து வதக்கவும்.

மேலும் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து கொத்தமல்லி இலை, உப்பு (தேவைக்கேற்ப) போட்டு மசாலா தயார் செய்து எடுக்கவும்.

இட்லி மாவை எடுத்து, அதனுடன்  ஏற்கனவே ரெடியாக வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு  இட்லி சட்டியில் மாவை ஊற்றி வெந்ததும் இறக்கினால் மசாலா இட்லி கேரட் ரெசிபி ரெடி.

Categories

Tech |