Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இட்லி ரூ.2, தோசை ரூ. 3” லாபத்துக்காக அல்ல…. சேவைக்காக…. தொழிலாளிகளுக்காக செயல்படும் ஹோட்டல்….!!!!

ஒரு ஹோட்டலில் இட்லி 2 ரூபாய்க்கும் தோசை 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புனவாசல் கிராமத்தில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் இட்லி 2 ரூபாய்க்கும் தோசை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊத்தப்பம் 4 ரூபாய்க்கும், ஆப்பம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கடைகளில் இட்லி 12 ரூபாய்க்கும், தோசை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு  கிராமத்தில் இட்லி 2 ரூபாய்க்கும் தோசை 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது மிகவும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது, கூலி தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இட்லி மற்றும் தோசையை குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். மேலும் லாபத்திற்காக ஹோட்டல் நடத்தவில்லை என்றும், கூலித்தொழிலாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் தான் ஹோட்டல் நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |