Categories
அரசியல் மாநில செய்திகள்

இட ஒதுக்கீடு பிரச்சனை… பாமகவினரின் போராட்டம்… சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தத்தால் பரபரப்பு..!!

இட ஒதுக்கீடு காரணமாக பாமகவினர் போராட்டம் நடத்தி வருவதால் சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

வணிகர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று காலை முதல் பாமகவினர் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே வெளியூர்களில் இருந்து வரும் பாமகவினர் சென்னையில் எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். தற்போது அவர்களின் வருகையை தடுக்க தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு வரும் புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Categories

Tech |