Categories
தேசிய செய்திகள்

“இட ஒதுக்கீட்டு உரிமை” வார்த்தை எங்கே….? ஒழித்துக்கட்ட திட்டமா….? CPIM கேள்வி….!!

இந்தியாவில் புதிய கல்வி கொள்கை முறை அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறுவிதமான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தென் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிப்பதாகவும், இருமொழி கல்வி கொள்கை தான் சிறந்தது. மும்மொழி கல்விக்கொள்கை  மாணவர்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் என்ற கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,

புதிய கல்விக் கொள்கை ஆவணத்தில் இட ஒதுக்கீடு என்ற சொல்லே இடம் பெறாதது, பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு உரிமையை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டமா ? என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். 

Categories

Tech |