Categories
மாநில செய்திகள்

இணையதளத்தில் சிபிசிஐடி எஃப்ஐஆர் வெளியிட கோரிய வழக்கு…… கோர்ட் அதிரடி உத்தரவு……!!!!!

சென்னை நந்தத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், சிபிஐ பதிவு செய்யும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், சிபிசிஐடி பிரிவின் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. இதனால் வழக்கு விவரங்களை சம்பந்தப்பட்டவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே சிபிசிஐடி பிரிவை இணையதளத்தில் சேர்த்து அவற்றின் முதல் தகவல் அறிக்கைகளை பதிவேற்றம் செய்ய உடனடிகள் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் அறிக்கைகளை மட்டுமே இணையதளத்தில் வெளியிட உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தீவிரமான வழக்குகளை கையாள சிபிசிஐடியின் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிட்டால் அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஆதாரங்களை கலைக்கவும் வாய்ப்பாகிவிடும். எனவே அந்த முதல் தகவல் அறிக்கைகள் வெளிப்படுவது இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இது குறித்து உச்சநீதிமன்றத்தை தான் அணுக முடியும். மேலும் வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எதற்காக முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என்ற காரணத்தையும் கூறவில்லை என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர். இதனையடுத்து மனுவை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரியதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |