Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த பெண்….. நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!!

பண மோசடியில் ஈடுபட்ட தாய்,மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பீர்க்கன்காரனை அம்பேத்கர் தெருவில் தமிழ்ச்செல்வி(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் குத்தகைக்கு வீடு இருப்பதாக இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் பிரபு என்பவர் அந்த விளம்பரத்தை பார்த்து தமிழ்ச்செல்வியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் லோகேஷ் பிரபு 6 லட்ச ரூபாயை தமிழ்ச்செல்வியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வீட்டை குத்தகைக்கு கொடுக்காமல் தமிழ்ச்செல்வி வேறு ஒரு வீட்டை காண்பித்து லோகேஷ் பிரபுவை ஏமாற்றியுள்ளார். இது குறித்து லோகேஷ் பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழ்ச்செல்வியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகன் சதீஷ் குமாரையும் கைது செய்தனர். மேலும் தலைமுறைவாக இருக்கும் தமிழ்செல்வியின் கணவர் தணிகாசலத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |