Categories
சினிமா தமிழ் சினிமா

இணையதளத்தில் வெளியானது மாஸ்டர்… அதிர்ச்சியில் விஜய்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.

அதனையடுத்து மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அதனை லட்சக்கணக்கான ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் முக்கிய காட்சிகள் லீக் ஆன நிலையில், முழு படமும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்திருந்த நிலையில் தற்போது மாஸ்டர் படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |