சாராய விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தெங்கியாநத்தம் மற்றும் மண் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஊரின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் கச்சிராப்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நல்லாத்தூர், பரிகம், மாத்தூர், மாதவச்சேரி, கரடிசித்தர், மண் மலை கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் காவல்துறையினர் சாராய விற்பனை நடைபெற்றால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறி செயல்பட்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.