நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்த நிலையில் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது. ஒரே நேரத்தில் அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க முயற்சி செய்ததால் www.ntaneet.nic.in என்ற இணையதளம் முடங்கியது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்