பெண்ணிடமிருந்து 4 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு கீழகாசிபாளையம் பகுதியில் வைஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வைஷாலியை தொடர்பு கொண்டு பேசி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் வைஷாலி 4 லட்சத்து 74 ஆயிரத்து 594 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
இதனை அடுத்து குறிப்பிட்ட அந்த செல்போன் எண்ணை மீண்டும் தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் முதலில் செய்த பணமும் திரும்பி வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைஷாலி திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.