Categories
சினிமா

இணையத்தில் கசியும் வாரிசு பட காட்சிகள்…. அது எப்படி?….. குழப்பத்தில் படக்குழு…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனல் சார்பாக தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து வாரிசு படத்தின் காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக் குழுவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பின் போது சிலர் அதனைத் திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்து உள்ளனர். அதன் பிறகு பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளி விட்டு சண்டை போடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வாரிசுடை பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வாரிசு படம் திரைக்கு வரும் முன்பே பல கட்சிகள் ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியாகி வருவது படத்திற்கான எதிர்பார்ப்பை குறைத்து விடும் என்றும் எனவே படப்பிடிப்பில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று படக்குழுவினரை விஜய் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர் .

Categories

Tech |