ஷாருக்கான் மற்றும் அட்லி இணையும் படப்பிடிப்பு ட்ராப்பாகி இருப்பதாக பரவி வந்த வதந்தியால் அட்லீ கவலைப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான அட்லி இந்தியில் ஷாருக்கான் நடிக்க உள்ள படத்தின் பணிகளானது நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் புனேவில் தொடங்கபட்டிருக்கின்றது. இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். ரெட் சில்லீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றது.
இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். படத்தில் முழுக்க முழுக்க உள்ள கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கின்றார். இந்நிலையில் ஷாருக்கான் மற்றும் அட்லி இணையும் இத்திரைப்படமானது நின்று விட்டதாக சில நாட்களாகவே தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. இச்செய்தி அறிந்த அட்லி தனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த வதந்தி குறித்து வருத்தப்பட்டு கூறியுள்ளதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படத்திற்கு லயன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.