நடிகர் சிவகார்த்திகேயன் மீது தற்போது புது சர்ச்சை எழுந்துள்ளது.
நம்ம வீட்டு பிள்ளை என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது இவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பத்து வருடங்கள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கினேன். மக்களாகிய நீங்கள், எனக்கு உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அளித்த இடம் நான் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. இந்தத் தருணத்தில் நான் எனக்கு முதல் படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு நன்றி. மேலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சக கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், பத்திரிக்கையாளர்கள், இணையதள நண்பர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு நன்றி என அதில் பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது கோபம் கொண்டனர். இணையத்தில் நீங்கள் சினிமாவுக்கு வருவதற்கு முக்கிய காரணம் தனுஷ் அவர்கள்தான், அதனால் நீங்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டியது அவருக்கு தான் என்று பதிவிட ஆரம்பித்தனர். இதனால் தனுஷ் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இணையத்தில் மாறி மாறி பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தன. இப்படி வந்து கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனுஷை போற்றும் விதமான வீடியோ ஒன்று பரவ ஆரம்பித்தது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், “என்னால் மெயின் ஹீரோவாக நடிக்க முடியும் என நம்பியவர் தனுஷ் அவர்கள்தான். என் மேல் நம்பிக்கை வைத்து பணத்தை போட்டவர் தனுஷ் சார் தான்.” இதுபோல் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவை தற்போது தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பரப்பி வருகின்றனர்.