இணையத்தில் வெளியான மாளவிகா மோகனனின் ஆபாச புகைப்படம், மாளவிகா அது போலியானது என பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை மாளவிகா மோகனன். இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும் மாளவிகா இவரைப் பற்றி வரும் மீம்ஸ்களையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வார். நடிகை மாளவிகா மோகனனின் ஆபாசமான புகைப்பட மொன்று வெளியிடப்பட்டதை குறித்து அவர் கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினியின் பேட்டை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்பொழுது மாளவிகா மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் எடுக்கும் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது மாளவிகாவினுடைய ஆபாசமான போட்டோ, எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பரவவிட்டுள்ளனர். இதை சில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இதைப்பார்த்த மாளவிகா இணையத்தளத்தில் தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில், சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை சிலர் இணையத்தில் பரப்புகின்றனர், சில நிறுவனமும் இதை பகிர்ந்துள்ளது. எனது போலியான புகைப்படத்தை கண்டால் புகார் கொடுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.