டார்க் நெட்டில் சட்ட விரோதமாக கொரோனா தடுப்பூசிகளையும், போலி தடுப்பு சான்றிதழ்களும் விற்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டார்க் நெட் என்பதை இணையத்தின் கள்ளச்சந்தை என்று சுருக்கமாக சொல்லலாம். அவ்வாறாக இந்த டார்க் நெட் சட்டவிரோதமாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் டார்க் நெட்டில் அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளையும், போலி தடுப்பு சான்றிதழ்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி டார்க் நெட் ரூ. 50,733 க்கு கொரோனா தடுப்பூசிகளும், ரூ. 10,871 க்கு போலி தடுப்பு சான்றிதழ்களுக்கு கட்டணமாக நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றது. இதனால் பல்வேறு நபர்கள் அந்தப் போலி தடுப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு வெவ்வேறு நாடுகளுக்கு எந்த தடையும் இன்றி சென்று வருவதாகவும், தடுப்பூசிகள் குறித்த விளம்பரங்கள் டார்க் நெட்டில் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.