கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களை தவறி மற்றவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, முந்தைய பருவ தேர்வு மற்றும் இன்டர்ணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு அரசாணை என்பது வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி தேர்வை இணைய வழியிலேயே நடத்துவதற்கான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டிருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் இறுதியான முடிவை தமிழக அரசு தான் எடுக்கும்.
இணைய வழியில் தேர்வு நடத்தலாமா ? என்பது குறித்து தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு முடிவு செய்யப்படும். ஏற்கனவே இறுதியாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் மாணவர்கள் மத்தியில் எழுப்பப்பட்டிருக்கிறது. அது குறித்து முடிவு எடுப்பதற்கு அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அப்படி தேர்வு நடத்தி தான் ஆக வேண்டும் என்றால்… இணைய வழியாக தேர்வு நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.