தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இணைய வழியில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அனைத்து கல்லூரி முதல்வர்கள், செயலாளர்கள் தங்கள் வளாகத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் இணையவழி தேர்வு மையங்களாக பயன்படுத்திக்கொள்ளவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.