Categories
மாநில செய்திகள்

“இணையவழி ஏலத்தின் மூலம் ரூ.34 கோடி வருமானம்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே பயணிகளுக்கு வசதியாக புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியது, இந்திய ரயில்வே அதன் பல்வேறு சேவைகளை இணையவழி ஏலங்கள் மூலம் நிறுவனங்களுக்கு ஒப்பந்தமிட்டு வருகிறது. அதன்படி தெற்கு ரயில்வே அதன் 6 மண்டலங்களில் ரூ.34.60 கோடி மதிப்பிலான 64 ஒப்பந்தங்களை இணையவழி ஏலத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது மண்டல வாரியாக சேலம் ரூ.21 கோடி, சென்னை ரூ.6.61 கோடி, மதுரை ரூ.2 கோடி, திருச்சி ரூ.1.72 கோடி என்ற மதிப்புகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவற்றில் வாகன நிறுத்தம், விளம்பரம், பார்சல் இடங்கள், ஏசி காத்திருப்பு அறைகள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கட்டண கழிப்பிடம் மேம்பாடு என அனைத்து சேவைகளும் அடங்கும். அதனைப் போல இணையவழி ஏலங்களின் மூலம் நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கலந்து கொள்ளும் வகையில் அமைகிறது. மேலும் இது மாதிரியான ஏலங்களின் மூலம் முதலீட்டாளர்கள் இடையே அதிக போட்டி நிலவுவதால் ரயில்வேவிற்கு அதிக வருமானம் ஈட்ட முடிகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |