Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இணையவழி குற்றம் மூலம் இழந்த 1.50 லட்சம் மீட்பு”…. உரியவர்களிடம் வழங்கினார் போலீஸ் சூப்பிரண்டு….!!!!!

இணையவழி குற்றம் மூலம் இழந்த 1 லட்சத்து 51 ஆயிரத்து 447 ருபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் தனக்கு வந்த குறுந்தகவலை கிளிக் செய்து வங்கி விவரங்களை கொடுத்த பிறகு தனது வங்கி கணக்கில் இருந்து 74 ஆயிரத்தை எடுத்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கடைசியாக 74,000 மீட்கப்பட்டு சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்கள்.

இதுபோல கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவர் செல்போன் அழைப்பின் மூலம் கடன் தருவதாக கூறியவர்களிடம் வங்கி விவரங்களை கொடுத்ததால் 40,000 எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு 40 ஆயிரத்தை மீட்டு மஞ்சுளாவிடம் ஒப்படைத்தார்கள்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் தனது வங்கி கணக்கு இருப்பு தொகையை சரி பார்ப்பதற்காக தவறுதலாக செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை கூறியதால் அவரது கணக்கிலிருந்து 37 ஆயிரத்து 447 ருபாய் எடுக்கப்பட்டது. இதையடுத்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 37,447 ரூபாயை கைப்பற்றி சரஸ்வதியிடம் ஒப்படைத்தார்கள்.

மொத்தமாக சைபர் க்ரைம் மூலம் மக்கள் இழந்த 1,51,447 ரூபாய் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி.

Categories

Tech |