Categories
மாநில செய்திகள்

இணைய வழி இலவச பட்டா…. வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்….!!!

விளிம்பு  நிலையிலுள்ள நரிக்குறவர், இருளர் இன மக்கள், ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இணையவழி இலவச வீட்டுமனை பட்டாக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விளிம்பு நிலையில் உள்ள57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை  வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு  இணையவழி பட்டாக்களை வழங்கினார்.

மேலும், 2022-2023 ஆம் நிதியாண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில்  மீதமுள்ள 2,33,552 குடும்பங்களுக்கும்   இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |