தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.
அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று ஈபிஎஸ் கூறினார். இதற்கு கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை மூடியதால்தான் ஆட்சியை இழந்தீர்கள் என்று இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.