உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. தங்களுடைய பெரும்பாலான வாழ் நாளை கடலில் வாழும் மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள், அவர்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி தங்கள் மீனவத் தொழில் மேம்படவும் தங்கள் வலைகளில் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டி கடல் மாதாவை வணங்குவார்கள்.
அதே சமயம் ஒவ்வொரு மாநிலத்திலும் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் கண்ணாடி அணியாமல் இருப்பதற்கான ரகசியம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உலக அளவில் 25 சதவீதம் புரோட்டின் மீன்களில் இருந்து கிடைக்கின்றது என கூறினார். மேலும் 25 வருடங்களாக ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தும் தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் இதுவரை நான் கண்ணாடி அணியவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.