Categories
உலக செய்திகள்

இதனால் எந்த பாதிப்பும் இல்லை…. துணிச்சலோடு முன்வந்த பிரதமர் ஜீன்…. தகவலை வெளியிட்ட பிரான்ஸ்…!!

பிரான்சில் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை அந்நாட்டு பிரதமர் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு  ஒப்புதல் வழங்கப்பட்டு அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாடானது  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இதனிடையே இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் காரணமாக பல்வேறு மக்கள் பயந்து இதனை போட்டுகொள்ள முன்வரவில்லை.

இதனால் பிரான்ஸ் அரசு இந்த தடுப்பூசிகளை போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இதனையடுத்து தற்போது அந்த பணிகள் திரும்பவும் தொடங்கப்பட்ட நிலையில் முதலாவது நபராக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அஸ்டிராஜெனிகா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமருக்கு இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |