பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பில் இருந்து கழிவு நீர் வெளியேறி கொண்டமயம்பாளையம் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிது பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று பொதுமக்கள் கீரணத்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக்கு என கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.