பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்த தடுப்பூசியான Johnson & Johnson’s னால் ஏதேனும் பக்க விளைவு ஏற்படுகிறதா என்பதற்கு விடை கிடைத்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரான்ஸ் நாட்டிலும் தற்போது Johnson & Johnson’s என்ற தடுப்பூசி அமலுக்கு வந்தது. இதற்கிடையே இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவதால் அவர்களுக்கு ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் இந்த தடுப்பூசியினால் பிளட் கிளாட் எனப்படும் ரத்தம் உறைவு ஏற்படுவதற்கு மிக சிறிய அளவில் தொடர்புண்டு என்றும், இதனால் மிக குறைந்த அளவில் பக்கவிளைவு ஏற்படும் என்றும் I’Agence Europeenne du medicament அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும் இந்த தடுப்பூசிக்கான பக்க விளைவு என்பது மிகவும் அரிதான ஒன்று என்றும் அந்த அறிக்கையில் வெளிவந்துள்ளது. எனவே Astrazeneca மற்றும் Johnson & Johnson’s மிக அவசியமான தடுப்பூசி என்று பிரான்ஸ் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.