சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் முதன்மைச் செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையே குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் சர்வதேச அளவில் தளவாடப் பொருட்களை வினியோகம் செய்யும் கட்டமைப்பில் இடையூறு விளைவித்து உள்ளது.
அதனை தொடர்ந்து வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுதல் மற்றும் பட்டினியை ஒழிப்பது என்று தென்பகுதியில் உள்ள சர்வதேச நாடுகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை மற்றும் தூதராக அளவில் அர்த்தமுள்ள வழியை ஏற்படுத்தவில்லை என்றால் மோதல்களால் சர்வதேச பொருளாதாரத்தில் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும். அதனால் மேற்குறி சர்வதேச முயற்சிகள் தடம் புரள வழிவகுக்கும். இந்த கூட்டத்தில் ஆயிரம் கணக்கான மெட்ரிக் டன் அளவிலான கோதுமை, அரசி, தானியங்கள் மற்றும் பருப்புகள் ஆகிய உணவு சார்ந்த உணவு உதவி என்ற வடிவில் நமது அண்டை நாடு மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா வழங்கியது என்று அவர் கூறினார்.