நடைபெறும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர்-ஆவடி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை தற்போது தமிழக அரசு விரிவாக்க முடிவு செய்து பணிகள் தொடங்க உள்ளது. இதனால் சாலையின் ஓரங்களில் மலர், காய்கறி போன்ற கடைகள் நடத்தும் சிறு தொழில் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில துணை தலைவ ராமலிங்கம் உள்ளிடோர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.