புதுக்கோட்டையில் போதை பொருள் விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகமானனோர் அடிமையாக இருப்பது அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், இதனை தடுப்பதற்காக தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிர ரோந்து பணியில் தனிப்படை குழுவினர் ஈடுபட்டு வந்த போது, சந்தேகத்தின்பேரில், அம்மாவட்டத்தில் உள்ள சாந்தபுரத்தில் வசிக்கும் சூரியநாராயணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது அவர் பெரியார் நகரைச் சேர்ந்த பாண்டி தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பாண்டி மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் போதை பொருட்கள் விற்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் பாஸ்கர், அற்புதன், அனுமந்தன், சரன், ஆகியோர் சேர்ந்து போதை பொருள்கள் விற்பதாக தகவல் தெரிவித்ததையடுத்து அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்