Categories
சினிமா தமிழ் சினிமா

“இதனால தான் என்னால் படங்களில் நடிக்க முடியாமல் போனது”….. பிரபல நடிகை பரபரப்பு பேட்டி…!!!!!!

அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பிரபல நடிகை ஒருவர் அளித்த பேட்டி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி. மேலும் இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி  என்ற  தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்குபின் படங்கள் மியூசிக் வீடியோ என ஸ்ரீநிதி நடித்துக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த செந்தூரப்பூவே என்ற தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்  ஸ்ரீநிதி. இந்த தொடரின் மூலமாக இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்து இருக்கின்றது. மேலும் இவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இருக்கின்றார்.

தற்போது இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி எனும் தொடரில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த கேள்விக்கு நான் சிறு வயதிலேயே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பிரச்சினையை சந்தித்து இருக்கின்றேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தனர். அப்போது அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என அந்த படத்தின் பிரபலம் ஒருவர் கூறியதாக ஷாக்கிங் தகவலை தெரிவித்து இருக்கின்றார்.

தனக்கு அப்போது அட்ஜஸ்ட்மென்ட் என்றால் என்னவென்று அந்த வயதில் புரிய வில்லை எனவும் நாங்கள் யோசிப்பதை பார்த்து “மகள் அட்ஜஸ்ட் பண்ணவில்லை என்றால் கூட பரவாயில்லை அம்மா அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் போதும்” எனக் கூறியது தன்னுடைய அம்மாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் “நாங்கள் அந்த மாதிரி பேமிலி  இல்லை” எனக் கூறி விட்டு அம்மா என்னை அழைத்துக் கொண்டு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதே மாதிரி பல பேர் அட்ஜஸ்ட் பண்ண சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |