திருப்பத்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் உரங்களை கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் வீடுகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் அடிக்கடி புகார் கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்டங்களில் எங்காவது வீடுகளில் உரங்களை வைத்து விற்பனை செய்தால் உடனடியாக கீழ்காணும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவ்வாறு விற்பனையில் ஈடுபடுபவர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.