Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இதனால நிறைய விபத்து நடக்குது”…. உடனே சரி பண்ணி தாங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!!!

குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் பகுதியில் உள்ள சந்து தெருவில் சிமெண்ட் சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. இந்த சிமெண்ட் சாலை சீரமைக்கப்படாததால் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது.

மேலும் இதன் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகின்றது. எனவே சந்து தெருவை சீரமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |