காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் துணைத்தலைவர் தில்லை ஆர். மக்கின், பொதுச்செயலாளர் பி. பி.கே. சித்தார்த்தன், ஜெயசந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், பேச்சாளர் மோகன்தாஸ், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.