Categories
உலக செய்திகள்

இதனை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டும்…. எகிப்து அதிபரை நேரில் சந்தித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி…. வெளியான தகவல்கள்….!!!!

இந்திய நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி எகிப்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நமது இந்திய நாட்டின் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரியான ராஜ்நாத் சிங் 3  நாட்கள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எகிப்து பாதுகாப்பு மந்திரி ஜெனரல் முகமது அகமது ஐகியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையான பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் அதனை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகள் குறித்து பேசினார். இதனைடுத்து இன்று அந்நாட்டு அதிபர் அப்துல் பத்தா அல் சிசியை  நேரில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டு முயற்சியாக ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பு துறையில் இணைந்து பொருட்களை உற்பத்தி செய்து உபகரணங்களை பராமரிப்பது உள்ளிட்டவற்றில்  கவனம் செலுத்த வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர்.

மேலும் எகிப்து நாடு பயங்கரவாதத்திற்கு எதிராக எடுத்த உறுதியான நிலைப்பாட்டை ராஜ்நாத் சிங்  பாராட்டினார். இந்நிலையில் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிமாறிக் கொள்ள வேண்டும் என எகிப்து அதிபர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய முதலீடு தளமாக எகிப்து விளங்குகிறது. இதுவரை அந்நாட்டில் 25 ஆயிரத்து 90 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எகிப்தில் பல்வேறு திட்ட பணிகளில் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |