ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் மாவட்ட தலைவர் பச்சையப்பன், மகளிர் அணி செயலாளர் மூக்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.