Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இதனை ஒழிக்க வேண்டும் ” …. கொத்தடிமைகள் ஒழிப்பு தின விழா…. விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி முதல்வர்….!!

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இதில்  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அஸ்மெஸ் பாத்திமா, பீர் முகமது, அப்ரோஸ், மற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் கல்லூரி முதல்வர் அப்பாஸ், நம் நாட்டில் கிராமப்புற மக்கள் அறியாமையில் இருந்து வரும் சூழ்நிலையில் அவர்களையும் , அவர்களது குழந்தைகளையும் குடும்ப உறுப்பினர்களையும் மாத சம்பளம் என்று கூறி  கொத்தடிமைகள்போல் சிலர் வைத்துள்ளனர். அதில் ஆடு மேய்ப்பவர்கள், நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்ட பலர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும், அதனை ஒழிக்க வேண்டும் என  அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Categories

Tech |