காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிளை அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி என்பவர் முன்னிலை வகித்து உள்ளார்.
இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர், தனுஷ்கோடி துரைசிங்கம், மாவட்ட தலைவி வேலம்மாள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.