அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டிற்கு ஸ்வீடன் ஆலோசனை கூறியுள்ளது.
டெக்சாஸ் அமெரிக்காவின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகிறது. மேலும் கழிவறை உபயோகத்திற்கு தண்ணீர் மற்றும் வெப்பப்படுத்த தேவைப்படும் கருவிகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் டெக்ஸாஸில் 10,700 காற்றாலைகள் பணியில் உறைந்து காணப்படுகிறது.
அதாவது கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காற்றாலைகள் டெக்ஸாஸில் நிறுவப்படும் போது அங்கு மிதமான வெப்ப நிலை நிலவியதால் பனியை தாங்கக்கூடிய எந்த அமைப்புகளும் மின்விசிறிகள் உடன் பொருத்தப்படவில்லை. ஆனால் தற்போது டெக்ஸாஸில் திடீரென இந்த புயல் வீசி அடித்ததால் வெப்பநிலை மாறி காற்றாலைகளில் இருக்கும் ராட்சத மின்விசிறிகள் பணியில் உறைந்து இயங்காமல் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்க்கு பயனளிக்கும் ஆலோசனையை ஸ்வீடன் வழங்கியுள்ளது.
அதாவது ஸ்வீடனில் உள்ள காற்றாலைகள் கடுமையான பனியையும் எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே காற்றாலைகள் அமைப்பதில் ஸ்வீடன் நிபுணத்துவம் பெற்றிருப்பதால் கார்பன் பைபர் மற்றும் வெப்ப நிலையை உணர்த்தக்கூடிய செயல்த்திறன் கொண்ட சென்சார்களை இணைப்பதற்காக அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும் இவ்வாறு செய்தால் காற்றாலைகள் கடும் பனியிலும் இயங்க முடியும். இதனால் தற்போது நாடே இருளில் மூழ்கி இருக்கும் நிலையை மாற்றலாம் என்று கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது கார்பன் பைபர் இணைத்தால் கூட இயங்காமல் உள்ள காற்றாலைகளை மீண்டும் இயக்க முடியும் என்றும் ஸ்வீடன் தெரிவித்துள்ளது.