Categories
உலக செய்திகள்

இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்…. பிரபல நாட்டில் “இந்திய பெயர் பலகையை சேதப்படுத்திய பயங்கரவாதிகள்”….. இந்தியா கண்டனம் ….!!!!

பகவத் கீதை பூங்காவின் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

கனடாவில் உள்ள பிராம்ப்டன்  பகுதியில் ஸ்ரீ பகவத் கீதா என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு பகவத் கீதையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவின் பெயர் பலகையை  மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கனடா அரசை  வலியுறுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து கனடாவுக்கான முன்னால் இந்திய துணை தூதர் நீரஜ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது. இந்த பூங்காவின் பெயர் பலகையை பயங்கரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற பொறுப்புணர்வுடன் கூடிய தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை இல்லை. பல முறைகள் நடத்தப்பட்டது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 15 -ஆம் தேதி டொரண்டோவில்  உள்ள நாராயணசாமி கோவிலின் மீது காலிஸ்தான் வாசகங்களும், வர்ணங்களும்  பூசப்பட்டு இருந்தது. எனவே இந்த குற்ற செயல்களை நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு  கனடாவை வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. மேலும் இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தளங்கள் பாதுகாக்கும் படி இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |